இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான் BF.7 வைரஸ், முதல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.!
கொரோனா வைரஸ் போன்றே உருமாற்றம் அடைந்த ஒமிக்ரானின் துணை வகையான BF.7 எனும் வைரஸ் தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.
குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் இந்தியாவில், ஒமிக்ரானின் துணை வகையான BF.7 வைரஸைக் கண்டறிந்துள்ளது. இரண்டு புதிய ஒமிக்ரான் துணை வகைகளான BF.7 மற்றும் BA.5.1.7 சமீபத்தில் சீனாவில் கண்டறியப்பட்டது. இந்த ஒமிக்ரான் வைரஸ் சீனாவில் பல இடங்களிலும் பரவி வருகின்ற நிலையில் தற்போது இந்தியாவில் இதன் ஒருவகை கண்டறியப்பட்டுள்ளது.
இன்னும் கொரோனா அலையே ஓயாத நேரத்தில் தற்போது இன்னொரு வைரஸ் ஒமிக்ரான் வகையான BF.7 கண்டறியப்பட்டது குறித்து, குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி, டாக்டர் மாதவி ஜோஷி கூறியதாவது, மக்களிடையே பயத்தை உருவாக்க வேண்டாம் என்றும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எங்கு சென்றாலும் முகமூடி அணிந்து செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.
மேலும், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், கடைகளிலும் தெருக்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும் இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்துகிறார்.