8 மாத வீட்டுக் காவல் ! விடுவிக்கப்பட்டார் உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா 8 மாத வீட்டுக் காவலில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இவர்களை விடுவிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதன் ஒருபகுதியாக ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு மேலாக வீட்டுக்காவிலில் இருந்த பரூக் அப்துல்லா இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இவரை தொடர்ந்து இவரது மகனும் முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.