அரேபிய வரலாற்றில் மிக நீண்ட காலமாக ஆட்சியாளராக திகழ்ந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத். இவர் கடந்த 49 ஆண்டுகளாக ஓமன் நாட்டின் மன்னராகப் பொறுப்பு வகித்தவர்.இந்நிலையில் சுல்தான் கபூஸ் இயற்கை எய்தினார்.உலக முழுவதும் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில் ஓமன் சுல்தான் கபூஸ் மறைவையொட்டி இந்தியாவில் ஜன.13 தேதி அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.அன்று தேசியக்கொடி நாளை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அரசு சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெறாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓமன் நாட்டின் மிக நீண்ட மன்னரின் மறைவிற்கு இந்திய பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்தும் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். மேலும் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மாவின் மாணவர் சுல்தான் கபூஸ்.
அவருக்கு இந்தியாவின் மீது மிகுந்த மதிப்பு மற்றும் இந்தியர்கள் மீது நல்லெண்ணமும் கொண்டவர். ஓமன் நாட்டில் இலட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அளித்ததில் மிக முக்கிய பங்கு இருவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…