ஜன.13 அரசு முறை துக்கம்…அரைகம்பத்தில் தேசியக்கொடி…மத்திய அரசு

Default Image
  • 49 ஆண்டுகால ஓமனின் சாகப்தம் மறைவையொட்டி மத்திய அரசு துக்கம் அனுசரிப்பு
  • ஜன.,13 தேதி அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது என்று மத்திய உள்துறை அறிவிப்பு 

அரேபிய வரலாற்றில் மிக நீண்ட காலமாக ஆட்சியாளராக திகழ்ந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத். இவர் கடந்த 49 ஆண்டுகளாக ஓமன் நாட்டின் மன்னராகப் பொறுப்பு வகித்தவர்.இந்நிலையில் சுல்தான் கபூஸ் இயற்கை எய்தினார்.உலக முழுவதும் உள்ள தலைவர்கள்  இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும்  வருகின்றனர்.

Image

இந்நிலையில் ஓமன் சுல்தான் கபூஸ் மறைவையொட்டி இந்தியாவில் ஜன.13 தேதி அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.அன்று தேசியக்கொடி நாளை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அரசு சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெறாது என்று  மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Image

ஓமன் நாட்டின் மிக நீண்ட மன்னரின் மறைவிற்கு இந்திய பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்தும் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தியும்  வருகின்றனர். மேலும் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மாவின் மாணவர் சுல்தான் கபூஸ்.

Image

அவருக்கு இந்தியாவின் மீது மிகுந்த மதிப்பு மற்றும் இந்தியர்கள் மீது நல்லெண்ணமும் கொண்டவர். ஓமன் நாட்டில் இலட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அளித்ததில் மிக முக்கிய பங்கு இருவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்