BJP MP Om Birla - Congress MP Kodikunnil Suresh [File Image]
டெல்லி: 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றும் இன்றும் புதிய எம்பிக்கள் பதவி பிராமணம் நிகழ்வு நடைபெறுகிறது. இதனை அடுத்து நாளை மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு இன்றுடன் நிறைவுபெறுகிறது.
மக்களவை சபாநாயகரை ஒரு மனதாக தேர்வு செய்ய பாஜக தலைமையிலான NDA கூட்டணி முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையை இன்று நடத்தியது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதற்காக காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உறுதியான முடிவு எட்டப்படவில்லை என தெரிகிறது.
இதனை அடுத்து, தற்போது வெளியான தகவலின்படி, பாஜக தலைமையிலான NDA கூட்டணி மக்களவை சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் கடந்த முறை மக்களவை சபாநாயகராக பொறுப்பில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல, I.N.D.I.A கூட்டணி சார்பாக கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் (கே.சுரேஷ்) மக்களவை சபாநாயகர் வேட்பாளராக வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளாவில் மாவேலிக்காரா மக்களவை தொகுதி எம்பியாக பொறுப்பில் உள்ளார். இவர் 8 முறை தொடர்ச்சியாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…