பிரதமர் மோடியுடன் ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகள் சந்திப்பு..!

Default Image

இந்திய பிரதமர் மோடியுடன் ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகள் இன்று சந்தித்து பேசியுள்ளனர். 

ஒலிம்பிக் 32 ஆவது போட்டி டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிலிருந்து 126 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 7 ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியாவிற்காக பெற்று தந்து வரலாற்று சாதனை படைத்தனர். இவை 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் பதக்கங்கள் ஆகும்.

ஈட்டி எறிதலில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் பெற்று கொடுத்து சிறப்புமிக்க சாதனை படைத்தார். இதனை அடுத்து பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு மற்றும் மல்யுத்த போட்டியில் ரவிக்குமார் தஹியா ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர். இதனை அடுத்து பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, குத்துசண்டை வீராங்கனை லவ்லினா, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.

மேலும், பி.வி.சிந்து ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்றதால் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையாக பெருமை அடைந்துள்ளார். இந்நிலையில் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு பரிசுகள், ரொக்க பணம்,  கார், வீடு, அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒலிம்பிக்கில் பங்குகொண்ட வீரர்களுக்கு பாராட்டு விழாக்களும் தொடர்ச்சியாக நடந்து  வருகிறது.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கு கொண்ட வீரர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். இதனை தொடர்ந்து தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக்கில் பங்கு கொண்ட அனைத்து வீரர்களுக்கும் அவரது இல்லத்தில் காலை உணவு அளித்து சந்தித்து பேசினார். அதில் பதக்கம் வென்ற வீரர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து பேசியுள்ளார். இதனை அடுத்து ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்