காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஒலிம்பிக் வீரர்!

Vijender Singh

Vijender Singh: பிரபல குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதல் கட்டமாக வரும் 19ம் தேதி தொடங்குகிறது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். கடந்த 2008 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங், காங்கிரஸ் சார்பில் 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட ஒற்றுமையாத்திரை பயணத்தில் இவர் கலந்து கொண்டிருந்தார். தற்போது வரும் மக்களவை தேர்தலில் காங்கிரசில் சீட் மறுக்கப்பட்டதால், அவர் பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, மதுரா தொகுதியில் நடிகை ஹேமமாலினிக்கு எதிராக குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங் நிறுத்தப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், சீட் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென டெல்லியில் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பாஜகவின் ஐக்கியமானார். எனவே, பாஜகவில் இணைந்த அவருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்