இணையத்தில் பரவுவது இந்திய ராணுவத்தின் புகைப்படம் இல்லை.. நைஜீரியா வீரர்களின் பழைய படம்!

Default Image

லடாக் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் புகைப்படம் என சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவிவருகிறது. அந்த புகைப்படம், நைஜீரிய வீரர்களின் புகைப்படம் என தெரியவந்துள்ளது.

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் முதலாவதாக ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அவர்களை தொடர்ந்து, மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

மேலும் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில், லடாக் கல்வான் தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் இவர்கள் தான் என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், அந்த புகைப்படத்தில் இருப்பது இந்திய வீரர்கள் இல்லை எனவும், அந்த புகைப்படம் நைஜீரியாவில் நடைபெற்ற ஒரு தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் என ஆல்ட் நியூஸ் தெரிவித்தது. இதுகுறித்து ஆல்ட் நியூஸ், கூகிள் ரிவர்ஸ் இமேஜ் முறையில் இந்த படத்தை தேடினார்கள்.

அப்பொழுது இந்த படம், பிரஸ் ஆப்பிரிக்கா என்ற வலைதளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பதிவிடப்பட்டது என ஆல்ட் நியூஸ் நிறுவனம் தெரிவித்தது. மேலும், அந்த தாக்குதலில் 105 நைஜீரிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்