Uber,Ola கார் ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
ஓலா, உபேர் கார் ஓட்டுநர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து மும்பை, டெல்லி, ஐதராபாத், புனே, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓலா, உபேர் நிறுவனங்கள் சொந்தமாகக் கார் வைத்திருக்கும் ஓட்டுநர்களிடம் அதிக வருமானம் பெறலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி ஆசைகாட்டியதாகவும், அந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நிறுவனத்துக்குச் சொந்தமான கார்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், தங்களுக்குச் சொந்தமான கார்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வாடகைப் பங்கீட்டை மறுசீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தால் மும்பையில் மட்டும் 45ஆயிரம் கார்கள் இயங்கவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.