நீங்கள் செய்தால் சரி., நாங்கள் செய்தால் தவறா? – பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!
வேளாண் சீர்திருத்தங்களை தங்கள் ஆட்சியின் போது ஆதரித்த எதிர்க்கட்சிகள் இப்போது விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள் என பிரதமர் மோடி குற்றசாட்டியுள்ளார்.
குஜராத் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ கிராமத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பின்னர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, கட்ச் பகுதி அதிவேகமாக வளர்ச்சி பெறுகிறது என்றும் கட்ச் பகுதி மக்கள் ஏமாற்றத்தை நம்பிக்கையாக மாற்றியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களை குஜராத் அறிமுகப்படுத்தி உள்ளது. சூரிய எரிசக்தி திட்டங்களை பலப்படுத்த குஜராத் பெரும்பாடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து பேசிய மோடி, வேளாண் சீர்திருத்தங்களை தங்கள் ஆட்சியின் போது ஆதரித்த எதிர்க்கட்சிகள் இப்போது விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று குற்றசாட்டியுள்ளார். நாங்கள் விவசாயிகளுக்கு உறுதியளித்து, அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வோம். எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்பி வருகின்றன. பொய் சொல்லி, விவசாயிகளை எதிர்க்கட்சிகள் பயமுறுத்துகின்றன. பொய் பரப்புபவர்களுக்கு விவசாயிகள் உரிய முறையில் பதிலடி கொடுப்பார்கள்.
வேளாண் சட்டங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேங்களுக்கு தீர்வு காண தயார். விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் அரசு உறுதி கொண்டுள்ளது. விவசாய சீர்திருத்தங்கள் பல ஆண்டுகளாக உழவர் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் கூட கேட்டுக்கொண்டிருக்கின்றன. தங்கள் ஆட்சியில் வேளாண் சீர்திருத்தங்களை கொண்டு வராத எதிர்க்கட்சிகள் தற்போது எதிர்க்கின்றன. எதிர்க்கட்சியில் அமர்ந்து விவசாயிகளை தவறாக வழிநடத்தும் அரசியல்வாதிகள், தாங்கள் ஆட்சியில் இருந்தபோது, இதே சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக இருந்தனர் என்று பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்துள்ளார்.
Speaking at the Foundation Stone Laying Ceremony of development projects in Kutch. https://t.co/1LwsxK9GB5
— Narendra Modi (@narendramodi) December 15, 2020