உத்தரபிரதேசத்தில் காருடன் மோதிய எண்ணெய் டேங்கர் – 7 பேர் உயிரிழப்பு!

உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் எண்ணெய் டேங்கர் ஒன்று காருடன் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது எண்ணெய் டேங்கர் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தியதில், எண்ணெய் டேங்கர் காருடன் மோதியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் காரில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விபத்து குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், காரில் சென்ற அனைவருமே உயிரிழந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது உயிரிழந்தவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025