எண்ணெய் நிறுவனத்தில் தீ விபத்து: 3 பேர் பலி; 44 பேர் படுகாயம்..!

மேற்கு வங்க மாநிலம் ஹல்டியாவில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் சுத்திகரிப்பு ஆலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், 44 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிறுவனத்தில் பணிநிறுத்தம் மற்றும் பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு யூனிட்டில் தீ விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் 37 பேர் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 7 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025