பிரதமர் நிதிக்கு நிதி வழங்கிய எண்ணெய் நிறுவனங்கள்! எத்தனை கோடி தெரியுமா?
சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, அவரது வேண்டுகோளை ஏற்று பிரபலங்களும், நிறுவனங்களும், பொதுமக்களும் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நிதிக்கு, எண்ணெய் நிறுவனங்கள், ரூ.1,031 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளன.
இதனையடுத்து, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தான் ட்வீட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.