4 நாட்களுக்குப் பிறகு மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடா பகுதியில் 22 இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பலை, கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். எம்டி மெரைன் எக்ஸ்பிரஸ் (MT Marine Express) என்ற சரக்குக் கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டதாகும். சுமார் 52 கோடி ரூபாய் மதிப்புள்ள 13,500 டன் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்ற இந்த கப்பலில் இருந்த 22 மாலுமிகளும் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
இந்த கப்பல், மேற்கு ஆப்பிரிக்காவில் பெனின் (Benin) என்ற நாட்டில், கொட்டோனு (Cotonou) என்ற துறைமுக நகரில் கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி மாயமானது. கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்த கப்பல் 4 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், மாலுமிகள் 22 பேரும் பத்திரமாக இருப்பதாகவும் கப்பல் போக்குவரத்து துறை தலைமை இயக்குநர் மாலினி சங்கர் தெரிவித்துள்ளார். கப்பலை விடுவிக்க கடற்கொள்ளையர்களுக்கு பிணைத் தொகை அளிக்கப்பட்டதா என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…