“அய்யோ ராமா! மக்கள் என்னை மறந்துவிட்டனர்” முன்னாள் பிரதமர் வேதனை…!!
போகிபீல் ரயில் பால திறப்பு விழாவிற்கு அழைகாத்ததால் முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மிக நீளமான, ஆசியாவில் 2-வது மிகப்பெரிய பாலமுமான போகிபீல் இரு அடுக்கு ரயில்-சாலை போக்குவரத்து பாலம் நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.சுமார் 4.9 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்திற்கு 1997-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த தேவேகவுடா அடிக்கல் நாட்டினார். 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதியில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் இந்த பாலத்தின் பணிகளை துவக்கி வைத்தார். சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கட்டி முடிக்கப்பட்ட இந்த போகிபீல் பாலத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
இந்த பாலத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி-க்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா_விற்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் பிரதமர் தேவேகவுடா, “ நான் பிரதமராக இருந்த காலத்தில், காஷ்மீரில் ரயில் பாதை, டெல்லியில் மெட்ரோ, போகிபீல் ரயில் சாலை பாலம் ஆகிய திட்டங்களுக்கு அப்போது தலா ரூ.100 கோடி விடுவித்து ஒப்புதல் கொடுத்து , அடிக்கல்லும் நட்டினேன்.ஆனால் தற்போது மக்கள் என்னை மறந்து விட்டனர்”. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “அய்யோ ராமா! என்னை யார் நினைவில் வைத்திருக்கிறார்கள்?என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா வேதனை தெரிவித்த்துள்ளார்.