லஞ்சம் கேட்ட அதிகாரிகள்.!ஏ.சி.பி. அலுவலகத்திலிருந்து நாற்காலியை திருடிய ஜப்பானிய இளைஞர்.!
லஞ்சம் கேட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக ஏ.சி.பி அலுவலகத்தில் இருந்த நாற்காலியை ஜப்பானிய இளைஞர் ஒருவர் திருடியுள்ளார் .
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோடோஷி தனகா என்ற 31 வயதான இளைஞர் ஆங்கிலம் கற்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு பெங்களூருக்கு வந்துள்ளார் .இவர் கடந்த சனிக்கிழமை பெங்களூரில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்த ஒரு நாற்காலியை திருடியுள்ளார் .
தனகா எதற்கு நாற்காலியை திருடினார் என்பது குறித்து நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,2019-ம் ஆண்டு ஆங்கில பயிற்சி மையத்தில் உள்ள உரிமையாளரை தாக்கியதாக கூறி தான் கைது செய்யப்பட்ட போது தன்னிடம் போலீஸ் அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டதாகவும் , இதுகுறித்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போது அதனை நீதிமன்றம் ரத்து செய்ததாகவும் கூறினார் .எனவே லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
அதே நேரத்தில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தனது விசாவின் காலம் முடிவடைந்து விட்டாதாகவும் ,எனவே தன்னை ஜப்பானிற்கு திரும்ப செல்ல கோரி வெளிநாட்டினரின் பிராந்திய பதிவு அலுவலகம் கூறியது.லஞ்சம் கேட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியாவில் தங்கி நடவடிக்கை எடுக்க விரும்புனேன்.அதனாலையே ஏ.சிபி அலுவலகத்தில் இருந்து நாற்காலியை திருடியதாகவும் ,அப்போது தான் அதிகாரிகள் மீதான வழக்கை தொடர முடியும் என்றும் தனகா கூறியுள்ளார்.