கருப்பு பூஞ்சைக்கு 20 நாள்களில் 32 பேர் பலி – மத்திய பிரதேச அரசு மருத்துவமனை அதிர்ச்சி தகவல்!

Published by
Hema

இந்தூரில் மருத்துவமனை ஒன்றில் 32 பேர் கருப்பு பூஞ்சையால் இறப்பு – மருத்துவமனை வளாகம் அதிர்ச்சி தகவல் !

இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை ஒரு புரம் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் இந்த சூழலில் தற்போது புதிதாக பூஞ்சைத் தொற்றுகளாலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றது.

தற்போது இந்தியாவில் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என வித விதமாக பூஞ்சை தொற்றுகள் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பூஞ்சை தொற்றுகளைப் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தியிறுந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரத்தில் உள்ள அரசு நடத்தும் மருத்துவமனையில் கடந்த 20 நாட்களில் மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சையால் 32 நோயாளிகள் இறந்ததாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தூரில் உள்ள மகாராஜா யேஷ்வந்த்ராவ் மருத்துவமனை (எம்.ஒய்.எச்) மத்திய பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

அங்கு மே 13 ஆம் தேதி கருப்பு பூஞ்சையின் முதல் நோயாளி அனுமதிக்கப்பட்டார், அதைத்தொடர்ந்து 439 பேர் கருப்பு பூஞ்சையாள் புதியதாக பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 84 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதில் 14 பேருக்கு கொரோனா இருந்ததாகவும், மேலும் 301 பேர் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் என்றும் மீதமுள்ள 8 பேருக்கு கொரோனா இல்லை என்றும் (எம்.ஒய்.எச்) கண்காணிப்பாளர் பிரமேந்திர தாகூர் கூறியுள்ளார்.

அதனிடையே 20 நாளில் 32 நோயளிகள் கருப்பு பூஞ்சையாள் இறந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற கடந்த 20 நாட்களில் 200 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டோம் என தாகூர் கூறியுள்ளார்.

தற்போது 323 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Hema

Recent Posts

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

29 minutes ago

2ம் ஆண்டில் தவெக… கொள்கைத் தலைவர்களின் சிலையை திறந்து வைத்த விஜய்.!

சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை  பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…

2 hours ago

வரும் 7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…

2 hours ago

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.! சாதிக்குமா இந்தியா?

லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…

3 hours ago

“புதிய அரசியல் அதிகார பாதையை உருவாக்குவோம்” – தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது.  இந்நிலையில், 2ஆம்…

3 hours ago

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…

17 hours ago