வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு ! பாஜக முதலிடம்,காங்கிரஸ் இரண்டாமிடம் ,மூன்றாமிடம் பிடித்த திமுக !
இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.இதனால் பாஜகவினர் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுளள்து .மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்று 2ம் இடத்தையும், 23 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக 3வது இடத்தையும் பிடித்துள்ளது.