டெல்லி திகார் சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பயந்து, செல்போனை விழுங்கிய கைதி.
டெல்லி திகார் சிறையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள கைதிகள் மொபைல் போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை உபயோகப்படுத்துகின்றார்களா என சோதனை செய்வது வழக்கம்.
அந்த வகையில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது திகார் சிறையில் எண்.1-ல் இருந்த கைதியிடம் சிறிய ரக செல்போன் ஒன்று இருந்துள்ளது. அதிகாரிகள் சோதனை செய்து விடுவார்கள் என்ற பயத்தில் அந்த கைதி மொபைல்போனை சிறை அதிகாரிகள் மற்றும் பிற கைதிகள் முன்னிலையிலேயே அந்த போனை விழுங்கியுள்ளார்.
அதன் பின்பு அவரது நிலைமை மோசமடைய சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் கூடுதல் சிகிச்சைக்காக தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து மத்திய சிறையின் இயக்குனர் சந்தீப் கோயல் கூறுகையில், செல்போனை விழுங்கிய கைதியின் நிலைமை முன்னேறி உள்ளது. மொபைல் போன் கைதியின் வயிற்றில் தான் உள்ளது. அது தானாகவே வருவதற்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொள்கின்றன. அப்படி வராத பட்சத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…