இந்திய ராணுவத்தில் முப்படைகளுக்கும் தனித்தனியே தலைமை தளபதிகள் உள்ளனர்.. ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக இருந்தனர்.
இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி ஒருவரை நியமிப்பது தொடர்பாக நீண்டகாலமாக மத்திய அரசு ஆலோசித்து வந்தது. அண்மையில் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியை உருவாக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.இதனால் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார்.பின்னர் பிபின் ராவத் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பதவியேற்றார்.இந்நிலையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு உதவ 37 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தலைமையின் கீழ் 2 இணை செயலாளர்கள், 13 துணை செயலாளர்கள், 22 செயலாளர்கள் செயல்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…