#Breaking:லட்சத்தீவில் மேலும் சில அதிரடியான விதிமுறைகள் – பிரபுல் கோடா படேல் உத்தரவு…!
- லட்சத்தீவின் புதிய அதிகாரியான பிரபுல் கோடா படேல்,அந்த தீவில் மாட்டிறைச்சிக்கு தடை,குண்டர் சட்டம் போன்ற சில மாற்றங்களை ஏற்கனவே கொண்டு வந்துள்ளார்.
- தற்போது படகு நிறுத்தம் மற்றும் ஹெலிகாப்டர் தளங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் உள்ளிட்ட மேலும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
லட்சத்தீவின் புதிய நிர்வாகியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா படேல், அப்பகுதியில் அதிரடியாக சில மாற்றங்களை கொண்டு வந்தார்.அதாவது,
- முஸ்லீம்கள் அதிகம் உள்ள லட்சத்தீவில் மாட்டிறைச்சி தடை,
- தீவுகளில் குற்ற விகிதம் மிகக் குறைவாக இருந்தாலும் குண்டர் சட்டத்தை அறிமுகப்படுத்துதல்,
- இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் தேர்தலில் நிற்க தடை,
- நிலத்தை கையகப்படுத்தும் அதிகாரங்களைக் கொண்ட சட்டங்களை இயற்றுதல்,
- கடலோர மக்களின் குடில்கள் அகற்றம்,
- மது விலக்கு நீக்கம்,
- லட்சத்தீவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் களைப்பு போன்ற திட்டங்களை அமல்படுத்தினார்.
இதற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து,கேரள அரசானது,லட்சத்தீவில் அமல்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து தனது எதிர்ப்பினை தெரிவித்தது.இதனைத் தொடர்ந்து, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்,பிரபுல் கோடா படேலை லட்சத்தீவில் இருந்து திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.
மேலும்,காங்கிஸ் எம்.பி ராகுல் காந்தி,மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து,லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக் கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும்,முதல்வர் பினராயி விஜயன் அவர்கள்,பிரபுல் கோடா படேலை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் கொண்டு வந்தார்.
லட்சத்தீவில் மேலும் சில புதிய விதிகள்:
இந்நிலையில்,இவ்வளவு கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்,லட்சத்தீவில் மேலும் சில மாற்றங்களை பிரபுல் கோடா படேல் கொண்டு வந்துள்ளார்.அதன்படி,
- அனைத்து மீன்பிடி படகுகளிலும் கண்காணிப்புக்காக அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட உத்தரவு.
- படகு நிறுத்தும் தளங்கள்,ஹெலிகாப்டர் தளங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம்.
- குப்பைகளை அறிவியல் முறைப்படி அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து,இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எம்.பி. முகமது பைசல்,மத்திய அரசானது புதிய விதிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.