ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஃபைபரின் தீபாவளி ஆஃபரை அறிவித்துள்ளது. ரூ.6500 வரை பலன்களை வழங்கவுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு ஜியோஃபைபர் டபுள் ஃபெஸ்டிவல் போனான்ஸாவை அறிவித்துள்ளது. இதன் படி, அக்டோபர் 18 முதல் அக்டோபர் 28 வரை ஜியோஃபைபர் இணைப்புகளைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ₹6,500 மதிப்புள்ள பலன்களை வழங்குகிறது.
புதிய ஜியோ ஃபைபர் இணைப்பை 6 மாதங்களுக்கான ₹599 திட்டம் அல்லது ₹899 திட்டத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை செல்லுபடியாகும். மேலும் இந்த இரண்டு கூடுதல் பலன்களுக்கும் 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி உடன் செல்லுபடியாகும்.
₹599 X 6 மாதம் திட்டம்: ஜியோஃபைபர் ₹599 திட்டம் 30Mbps இன் இணைய வேகத்துடன் 550 க்கும் மேற்பட்ட சேனல்களையும் 14+ OTT ஆப்ஸ் களையும் வழங்குகிறது. 6 மாத காலத்திற்கு (ரூ. 3,594 + ரூ. 647 ஜிஎஸ்டி) ரூ.4,241 செலுத்தினால், இந்தத் திட்டத்தில் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.4,500 மதிப்புள்ள பலன்களைப் (வவுச்சர்களை) பெறுவார்கள்.
₹899 X 6 மாதம் திட்டம்: ஜியோ ஃபைபர் ₹899 திட்டம் 100Mbps இன் இணைய வேகத்துடன் 550 க்கும் மேற்பட்ட சேனல்களையும் 14+ OTT ஆப்ஸ் களையும் வழங்குகிறது. 6 மாத காலத்திற்கு (ரூ. 5,394 + ரூ. 971 ஜிஎஸ்டி) ரூ.6,365 செலுத்தினால், இந்தத் திட்டத்தில் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.6,500 மதிப்புள்ள பலன்களைப் (வவுச்சர்களை) பெறுவார்கள்.
₹899 X 3 மாதம் திட்டம்: ஜியோ ஃபைபர் இணைப்பை 3 மாத காலத்திற்கு (ரூ.3,182 + ₹485 ஜிஎஸ்டி) ரூ.2,697க்கு ரீசார்ஜ் செய்தால், புதிய வாடிக்கையாளர்கள் ரூ.3,500 மதிப்புள்ள வவுச்சர்களைப் பெறுவார்கள்.
மேலும், மேற்கூறிய திட்டங்களில் ஏதேனும் ஒன்றை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமின்றி ரூ.6,000 மதிப்புள்ள 4K ஜியோ ஃபைபர் செட் டாப் பாக்ஸைப் பெறுவார்கள்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…