Categories: இந்தியா

மோடிஜி அழலாம்… நான் அழ விரும்பவில்லை.. நகைச்சுவை நடிகர் ஆதங்கம்.!

Published by
மணிகண்டன்

சென்னை : வாரணாசி தொகுதியில் பிரதமரை எதிர்த்து போட்டியிட்ட 39 பேரில் 33 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் கடைசிகட்ட தேர்தல் நாளான ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், கடந்த செவ்வாய் கிழமையோடு (மே 14) வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. நேற்று வேட்புமனு பரிசீலனை பெற்று மொத்தம் 40 வேட்புமனுக்களில் 33 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பிரதமர் மோடி உட்பட மொத்தம் 7 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் ராஜஸ்தானை சேர்ந்த ஷியாம் ரங்கீலாவும் ஒருவர். சுயேட்சையாக களமிறங்கிய இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் தனது வேட்புமனுவை வாரணாசியில் தாக்கல் செய்தார். அவர், தேர்தல் வேட்பாளருக்கான சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என்ற காரணத்தை கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஷியாம் ரங்கீலா தனது டிவிட்டர் பக்கத்தில் தேர்தல் ஆணையம் பற்றிய தனது ஆதங்கத்தை பதிவிட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் அவர் பேசுகையில், தேர்தல் ஆணையம் வாரணாசியில் தேர்தலை ஒரு விளையாட்டாக மாற்றிவிட்டது என குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், இன்று (மே 15) எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. நீங்கள் (தேர்தல் ஆணையம்) நிராகரிப்பீர்கள் என்றால் அதனை முதலில் ஏன் ஏற்றுக்கொண்டீர்கள்? நான் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். தற்போது எனது ஆவணங்களில் சிக்கல்கள் இருப்பதாகவும், நான் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என்றும் என்னிடம் கூறினார்கள்.

நான் முதன் முதலாக வேட்புமனு தாக்கல் செய்கிறேன். எனக்கு அதற்குரிய அனுபவம் இல்லை . நான் என்னுடன் வழக்கறிஞர்களை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி கேட்டேன் அனுமதிக்கவில்லை. என்னை தனியாக அழைத்தனர். ஆனால் இப்போது, நான் சத்திய பிரமாணம் செய்யவில்லை என கூறி நிராகரித்து விட்டார்கள். நீங்கள் ஏன் என்னிடம் அப்போதே கேட்கவில்லை என நான்  அதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால், அது அவர்களின் வேலை அல்ல என்று பதிலளித்தார்கள்.

நான், மே 14ம் தேதி மதியம் 2.58க்கே படிவத்தை சமர்ப்பித்துவிட்டேன். அதில் ஏதாவது பிரச்சினை இருந்திருந்தால் சுமார் 3 மணி வரை நேரம் இருந்தது . நீங்கள் அப்போதே கூறி இருக்கலாம். நான் மே 10 முதல் வேட்புமனு செய்ய முயற்சித்து வருகிறேன். ஆனால் அனுமதிக்கப்படவில்லை. என் நண்பன் தாக்கப்பட்டான். தேர்தல் நேரத்தில் மோடிஜி நடித்து அழலாம். ஆனால் நான் இங்கு அழ விரும்பவில்லை. நான் அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. நான் இங்கு வெற்றி பெறவில்லை. இருந்தாலும், இந்த ஒரு செய்தியை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று இதனை பதிவிடுகிறேன் என தனது வீடியோவில் ஷியாம் ரங்கீலா தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…

3 hours ago

“கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்”…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…

4 hours ago

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

5 hours ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

6 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

7 hours ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

7 hours ago