தனது ஓராண்டு சம்பளத்தை ஃபானி புயலுக்காக நிதியுதவியாக அளித்த முதலமைச்சர்!
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று கடந்த வெள்ளிக்கிழமையன்று கரையை கடந்தது. இந்த புயல் மணிக்கு 200 கிமீ வேகத்தில் ஒடிசா புரி பகுதியை மிகவும் பாதித்தது. பலர் தங்கள் வீடு உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
புயல் பாதித்த பகுதிகளை இன்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பார்வையிட்டு, மத்திய அரசு சார்பில் 1000 கோடி ருபாய் நிதி ஒடிசா மக்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பலரும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.
தற்போது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது ஓராண்டு சம்பளத்தை தனது மாநில ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியாக அறிவித்தார்.
DINASUVADU