ஒடிசா ரயில் விபத்து – பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்..!
ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்? என பிரதமருக்கு கார்கே கேள்வி.
ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் பலர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘இந்திய வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்தாக ஒடிசா பாலசோர் ரயில் விபத்து உள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும்
இந்திய ரயில்வேயில் 4% வழித்தடங்களில் மட்டுமே கவச் பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டிருப்பது ஏன்? ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்? ரயில்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை அமைக்கக் கோரி கார்கே கடிதம் எழுதியுள்ளார்.