ஒடிசா ரயில் விபத்து: 40 பயணிகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்!

death toll hike

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களில் 40 பயணிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில், சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், எஸ்எம்விடி பெங்களூரு-ஹவுரா எஸ்எஃப் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 278 பயணிகள் உயிரிழந்த நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஒடிசா மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், பலர் வீடு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களில் 40 பயணிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாஹாநாகா ரயில் நிலையத்தில் ரயில் விபத்து நடந்தபோது ரயில் பாதை மேல் செல்லும் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. ரயில் என்ஜினுக்கு மின்சாரம் தரும் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ஏராளமான பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது, மீட்கப்பட்ட உடல்களில் 40 பேரின் உடலில் எந்த காயமோ, ரத்தம் வந்ததற்கான தடயமோ காணப்படவில்லை. உடலில் மின்சாரம் பாய்ந்ததால் தான் எவ்வித காயமும் இன்றி 40 பேர் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்