பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள 17 ஆயிரம் கோடி – ஒடிசா அரசு

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள 17 ஆயிரம் கோடி திட்டத்தை அறிவித்த ஒடிசா அரசு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்ட்டுள்ளது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடியை தவிர்க்க அனைத்து மாநில அரசும், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், ஒடிசா அரசு, பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள ரூ.17,000 கோடிக்கு, பொதுமக்கள், விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக நிதிதிட்டத்தை அறிவித்துள்ளது.