இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனாவால் இன்று வரை 5,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 473 பேர் குணமடைந்துள்ளதாகவும் , 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரிசாவில் கொரோனாவால் 42 பேர் பாதித்துள்ள நிலையில் இதுவரை ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இன்று ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரிசாவில் கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஏப்ரல் 14 வரை இருந்த ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.மேலும் ஒடிசாவில் ஜூன் 17ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களும் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
நாளை மறுநாள் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார் இந்த ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…