நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பிரதமருக்கு ஒடிசா முதல்வர் கோரிக்கை.!
ஒடிசாயில் கொரோனா மற்றும் கடுமையான வெள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் – முதல்வர்
நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவித்தது. பின்னர் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. மேலும், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை கைவிட கோரி பல அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல்வர்கள் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், ஒடிசா முதல்வர், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பதிவிட்டுள்ள ஒடிசா அரசு, முதல்வர் நவீன் பட்நாயக் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, ஒடிசா மாநிலத்தில் கொரோனா பரவல் மற்றும் கடுமையான வெள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜேஇஇ போன்ற முதன்மை தேர்வுகளை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என்று பதிவிட்டுள்ளனர்.
CM @Naveen_Odisha spoke to Prime Minister @narendramodi over telephone and requested him for postponement of #NEET and #JEE Main Exam in view of #COVID19 pandemic and severe flood situation in many parts of #Odisha.
— CMO Odisha (@CMO_Odisha) August 27, 2020