பிறந்தநாளை கொண்டாட மறுத்த ஒடிசா முதல்வர்! காரணம் இதுதானா?

Published by
லீனா

கொரோனா பரவலால் தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்த ஒடிசா முதல்வர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி  நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.

இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இன்று தனது 74-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.  இவர் கொரோனா பரவல் காரணமாக, தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக, தனது ஆதரவாளர்கள் அவரது வீட்டிற்கு விஜயம் செய்ய வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவவும், அந்த நேரத்தில் இரத்தம் மற்றும் பிளாஸ்மாவை தானம் செய்யவும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ஒடிசா மக்களின் அன்பு மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு நான் எப்போதும் கடன்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இவர் தனது பிறந்தநாளை மூன்றாவது முறையாக கொண்டாட மறுத்துள்ளார். இவர், ஃபானி சூறாவளி காரணமாகவும், 2018 ஆம் ஆண்டில் மாநிலத்தை நாசப்படுத்திய டிட்லி சூறாவளியின் காரணமாகவும் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

AUS vs IND : விக்கெட்டை சொல்லி எடுக்கும் இந்திய அணி! சொந்த மண்ணில் தடுமாறும் ஆஸி.!

AUS vs IND : விக்கெட்டை சொல்லி எடுக்கும் இந்திய அணி! சொந்த மண்ணில் தடுமாறும் ஆஸி.!

பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…

24 minutes ago

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…

33 minutes ago

1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…

46 minutes ago

“பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்” தமிழக அரசுக்கு அட்வைஸ் செய்த விஜய்!

சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…

56 minutes ago

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுத்த ஹிஸ்புல்லா! 250 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…

1 hour ago

அதானி விவகாரம்., வயநாடு விவகாரம்., ஆரம்பிக்கும் முன்னரே ஆட்டத்துக்கு தயாரான எதிர்க்கட்சிகள்!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…

1 hour ago