ஒடிசா விபத்து: உண்மைகளை மறைக்க வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதா? மம்தா கேள்வி.!

WB CM Mamta

ஒடிசா ரயில் விபத்தில் உண்மைகளை மறைப்பதற்கு சிபிஐ க்கு வழக்கு கொடுக்கப்பட்டதா என மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த வாரம் இந்தியாவையே புரட்டிப்போட்ட ஒடிசா பாலசோர் மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1000க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர். மேலும் உயிரிழந்தவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருந்தது, மற்றும் இறந்தவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் இருந்தன.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்த விபத்து குறித்து மத்திய அரசை கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒடிசாவில் ஒரே நேரத்தில் மூன்று ரயில்களுக்கு இடையே விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு காரணமானவர்களை விசாரிப்பது மத்திய அரசின் வேலை.

ஆனால் மத்திய அரசு, ஒவ்வொரு நாளும் இந்த வழக்கில் புதிய விவரங்களை கொண்டுவருகிறது, தற்போது வழக்கு முடிந்துவிட்டதா? இல்லை வழக்கில் உண்மைகளை மறைப்பதற்கு சிபிஐ க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளதா என மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.</

p>

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்