4 மாத ஊதியத்தை முன்பணமாக அளிக்க உத்தரவிட்ட ஒடிசா அரசு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா தாக்குதலுக்கு இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க கேட்டுக்கொண்டுள்ளபட்டுள்ளது.
இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றானது மாநில பேரிடராக அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது இன்னொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியத்தை முன்பணமாக அளிக்க மாநில முதல்வர் நவீன்பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.