யாஸ் புயல்: கடலோர மாவடங்களுக்கு உயர் எச்சரிக்கை – ஒடிசா அரசு..!

ஒடிசாவில் கடலோர மாவட்டங்களுக்கு உயர் கட்ட புயல் எச்சரிக்கை… அனைத்து மீட்பு பணிகளும் தயார்நிலை.
ஒரு வாரத்திற்கு முன்பு, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், மற்றும் கேரளா உள்ளிட்ட மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களை தாக்தே எனும் ஒரு கடுமையான சூறாவளி புயல் தாக்கியது, இதனையடுத்து யாஸ் புயல் ஒடிசாவில் உருவாகியுள்ளது, மேலும் ஒடிசாவில் மே 26 ம் தேதி யாஸ் புயல் காரணமாக நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் உயர் கட்ட புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது ஒடிசா அரசு, மேலும் ஒடிசாவின் தலைமைச் செயலாளர் சுரேஷ் சந்திர மொஹாபத்ரா வெள்ளிக்கிழமையன்று என்.டி.ஆர்.எஃப், கடலோர காவல்படை, ஐ.என்.எஸ்.சிலிகா, டி.ஜி. போலீஸ், மற்றும் டி.ஜி. தீயணைப்பு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
மேலும் ஒடிசாவில் யாஸ் புயல் காரணமாக ஏற்படும் எந்தவொரு நிகழ்விற்கும் தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மின்சார நிறுவனம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற நீர் வழங்கல் துறைகள், சுகாதாரத் துறைகள், ஒடிசா பேரிடர் படை மற்றும் என்டிஆர்எஃப் குழுக்கள் போன்ற அனைத்து துறைகளும் தயாராக இருப்பதாக செயலாளர் மகாபத்ரா தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025