இரு நாடுகளுக்கிடையில் நடந்து வரும் இராணுவ நிலைப்பாட்டை குறைக்க இந்தியாவும், சீனாவும் கிழக்கு லடாக்கில் அக்டோபர் 12-ம் தேதி ஏழாவது கமாண்டர்-லெவல் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளன.
செப்டம்பர் 21-ம் தேதி அன்று இரு தரப்பினரும் கடைசியாக பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதில் அனைத்து புள்ளிகளிலும் விரிவான பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. பின்னர், செப்டம்பர் 22-ம் தேதி அன்று இந்தியா மற்றும் சீனா வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், இரு தரப்பினரும் அதிக வீரர்களை அனுப்புவதை நிறுத்தவும், ஏழாவது சுற்று தளபதி மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தவும் ஒப்புக் கொண்டதாகக் கூறியது.
மேலும், சரியான முறையில் நடைமுறை நடவடிக்கைகளை எடுக்கவும், சிக்கல்களைத் தீர்ப்பதுடன், எல்லைப் பகுதியில் அமைதியை கூட்டாகப்பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே மேனன் ஆகியோர் ஆறாவது பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
அடுத்த மாதம் தனது பதவிக் காலத்தை லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங்நிறைவு செய்யவுள்ள நிலையில், சிங்கிற்கு பதிலாக லேவை தளமாகக் கொண்ட 14 கார்ப்ஸின் தளபதியாக மேனன் நியமிக்க உள்ளார்.
எல்லை பதட்டங்களைக் குறைக்க சீனாவுடன் இராணுவப் பேச்சுவார்த்தைக்கு சிங் தலைமை தாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…