டெல்லி ஷாகின் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 3 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், போராடுவதற்கான வழிமுறைகள், வழிகாட்டுதல்களை வகுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சாலைகள் அல்லது பொது இடங்களை கால வரையின்றி ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது இல்லை என கூறியுள்ளது.
மேலும், ஷாகின் பாக் பகுதியோ அல்லது வேறு எந்த இடமாக இருந்தாலும் பொது இடங்களை காலவரையின்றி ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை என்றும், பொதுமக்களுக்கு இடையூறு அளிப்பதாகவும் அவர்களின் உரிமைகளையும் பறிப்பதாக பொது இடங்களை ஆக்கிரமித்து நடத்தப்படும் போராட்டங்கள் அமைகின்றன என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உரிய முறையில் செயல்பட வேண்டும் என்றும், நீதிமன்றங்களின் பின்னால் ஒளிந்து கொள்ளக்கூடாது அறிவுறுத்தியுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…