இந்தியாவின் காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் ஷனாஸ் தனது குடும்பத்தினருடன் 3 அடுக்கு மாடியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை இந்த கட்டிடம் பனிச்சரிவில் சிக்கி பனியில் புதைந்தது. இந்த பனிச்சரிவில் ஷனாசின் ஒரு மகனும், ஒரு மகளும் பனியில் புதைந்து உயிரிழந்தனர். இந்நிலையில் மீட்பு படையினர் நடத்திய மீட்பு பணியில், 18 மணி நேரத்துக்குப் பின்னர் ஷனாசின் மற்றொரு மகலான சமினாவை (12) மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
இந்த பனிச்சரிவில் சிக்கிய அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைக்கு பின் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த பனிச்சரிவு விபத்துகளில் சிக்கி இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர். நீலம் பள்ளத்தாக்கில் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பனிச்சரிவினால் சேதமடைந்துள்ளது. இதுவரை 76 பேர் உயிர் இழந்துள்ளனர்.இந்த தகவல் அனைவரையும் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பக்கம் மக்களின் கவனத்தை திருப்பியுள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…