ஓபிசி பிரிவினர்: மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
ஓபிசி பிரிவினரை நிர்ணயம் செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்.
இட ஒதுக்கீட்டுக்கான ஓபிசி பிரிவினர் பட்டியலை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சட்டத் திருத்த மசோதா டெல்லி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
இதன்பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஓபிசி பிரிவினரை நிர்ணயம் செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.