ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவு – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இரங்கல்!
எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் என தமிழிசை சவுந்தராஜன் இரங்கல்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். இவரது மறைவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், அதிமுக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்றும், செய்தி வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அவரது பதில், தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவருமான சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு சகோதரியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும்,தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி.விஜயலட்சுமி அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.(1/2)@OfficeOfOPS@OPRavindhranath
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) September 1, 2021