“ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதம்” ! கடலை மிட்டாயின் நன்மைகள் குறித்து விளக்கிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை
ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதத்தில் கடலை மிட்டாயின் நன்மைகளை குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊட்டச்சத்து மிகுந்த கடலை மிட்டாய் குறித்த விழிப்புணர்வை வீடியோ மூலம் தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். அதில் கடலையும், வேர்க்கடலையையும், வெள்ளைப்பாகையையும் இணைத்து செய்யக்கூடியது தான் இந்த கடலை மிட்டாய். வேர்க்கடலை மற்றும் வெள்ளைப்பாகையில் அபரீதமான ஊட்டச்சத்து உள்ளதாகவும், இது எளிதாக நமக்கு கிடைப்பதால் இதன் அருமை யாருக்கும் தெரியவில்லை.
வெள்ளைப்பாகையில் உள்ள ஆன்டிஆக்ஸிடைன்ஸ் நமது உடலை இளமையாக வைக்க உதவும். வேர்க்கடலையில் உள்ள பீனாலிக் ஆசிட் இதயத்தை பாதுகாக்க உதவும். மேலும் இதிலுள்ள பைட்டோஸ்டெரோல்கள் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும். மேலும் வேர்க்கடலையில் உள்ள பொருட்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. மேலும் இந்த கடலை மிட்டாய் மறதி நோய் வராமலும் பாதுகாக்கும் . எல்லாவற்றுக்கும் மேலாக நமது தலை பளப்பளப்பாக வைக்கவும் உதவும். ஏனெனில் இதில் வைட்டமின் ஈ, சிங், மெக்னீசியம் உள்ளது மட்டுமில்லாமல் இதிலுள்ள அமினோ அமிலம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும். இவ்வளவு நன்மைகளை கொண்ட உணவு பொருளை தினமும் உண்டு பழகுங்கள் என்றும், இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் பள்ளிகளில் சத்துணவை அளிப்பது போன்று கடலை மிட்டாயையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் தனது யோசனை என்றும் கூறியுள்ளார்.
“#ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதம்”
“கடலை மிட்டாய் உடலை பலப்படுத்தும்”#Nutritionmonth #PoshanMaah#TelanganaGovernor #DrTamilisaiSoundararajan #Rajbhavan #Hyderabad #Telangana@PMOIndia @rashtrapatibhvn @VPSecretariat @HMOIndia @MoHFW_INDIA pic.twitter.com/CFM2ZfspSl— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) September 5, 2020