கன்னியாஸ்திரியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பேராயர் பிரான்கோவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
பஞ்சாபில் உள்ள ஜலந்தர் கிறிஸ்தவ மிஷனரியில் பேராயராக(பிஷப்) இருந்தவர் பிரான்கோ முலக்கல். அதே மிஷனரியை சேர்ந்த கேரளாவின் கோட்டயத்தில் உள்ள கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் ரீதியாக தன்னை பிரான்கோ 2014 முதல் 2016-ம் ஆண்டின் இடைப்பட்ட காலங்களில் துன்புறுத்தியதாக கூறி புகார் செய்திருந்தார். அதனையடுத்து கைது செய்யப்பட்டு தற்போது பஞ்சாப் ஜலந்தரில் ஜாமீனில் உள்ள பிரான்கோவின் பாலியல் வழக்கு கோட்டயம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே கடந்த மார்ச் மாதத்தில் பிரான்கோ, தன் மீது பொய் புகார் கன்னியாஸ்திரி அளித்துள்ளதாகவும், தன்னை விடுவிக்க கோரியும் பலமுறை மனு தாக்கல் செய்ய, கோட்டயம் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. மேலும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவையும் கடந்த ஜூலை தள்ளுபடி செய்தது.
தொடர்ந்து ஆஜராகாமல் இருந்த பிரான்கோவின் ஜாமீனை ரத்து செய்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் தன்னை விடுவிக்க கோரி மேல்முறையீடு செய்த பிரான்கோவின் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் பிரான்கோவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…