கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு.. 28 ஆண்டுகளுக்கு பின் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

Default Image

கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா. இவர் அங்குள்ள பிஎம்சி கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் தனது படிப்புக்காக செயின் பயஸ் கான்வென்டில் தங்கியிருந்துள்ளார். கடந்த 1992-ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி அவர் படிக்கும் கான்வட்டில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

முதலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் கோட்டையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த சிபிஐ குழு நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலையாளிகளை கண்டறிய சிபிஐ குழு அமைக்கப்பட்ட நிலையில், அபயாவை பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கிணற்றுக்குள் தள்ளி விட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளும்போது, பாதிரியார்களுக்கும் கன்னியாஸ்திரி செபிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகவும், அதனை அபியா நேரில் பார்த்து விட்டதாகவும், இதனை வெளியே கூறிவிடுவாளோ என பயந்து கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டனர்.

இதனால் இவர்கள் மூன்று பேரை கடந்த 2008 நவம்பரில் கைது செய்தனர். இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கேரள ஐகோர்ட்டை அணுகியுள்ளார். அப்பொழுது பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அவர் விடுதலை செய்யப்பட்டார். இருவரையும் கைது செய்யப்பட்டு, 28 ஆண்டுகளாக இந்த வழக்கில் 177 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வந்தது.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சனில் குமார், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என கூறினார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்