இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு
இலங்கையில், நேற்று ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், தொடர்ந்து 8 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்றும் பலியானவர்களில் 3 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக, மத்தியமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார். தற்போது மேலும் இரண்டு இந்தியர்கள் பலியாகி உள்ளதாக மத்தியமைச்சர் சுஸ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.