2020 ஆம் ஆண்டு நடைபெறும் நீட் தேர்வு தேதி,விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு
2020 ஆம் ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 -ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியாகும் .2020-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்விற்காக டிசம்பர் 2-ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மார்ச் 27-ஆம் தேதி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.