தொடங்கியது சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் !என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக புறக்கணிப்பு
புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் தொடங்கிய நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக புறக்கணித்துள்ளனர்.
புதுச்சேரியில் இன்று ஒருநாள் மட்டும் நடக்கும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.அதில்,மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதுச்சேரி பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் புதுச்சேரி பேரவையில் முதல்வர் நாராயணசாமி குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.பின்னர் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக புறக்கணித்துள்ளனர். மக்கள் பிரச்சனைகளை குறித்து விவாதிக்காமல் அரசியல் நோக்கத்தோடு கூட்டப்பட்டதாக குற்றச்சாட்டியுள்ளனர்.