இனி உங்கள் சைக்கிள்களை மெட்ரோ ரயிலில் எடுத்து செல்லலாம் என கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய துறைமுக நகரமான கொச்சி முழுவதிலும் மெட்ரோ ரயில் சேவைகள் நன்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொச்சியில் அதிக அளவில் சைக்கிளில் பலர் பயணிப்பதை கண்டு தற்பொழுது மெட்ரோவில் தங்களது சைக்கிள்களை பயணிகள் இலவசமாக கொண்டுவரலாம் என கொச்சி மெட்ரோ ரயில் அறிவித்துள்ளது. இன்றிலிருந்து சங்கம் பூஜா பூங்கா, டவுன்ஹால், எர்ணாகுளம் தெற்கு, பலாரவத்தம், மகாராஜா கல்லூரி மற்றும் எலம்குலம் ஆகிய மெட்ரோ நிலையங்களில் இந்த சலுகைகள் சைக்கிள் ஓட்டிகளுக்கு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆறு இடங்களில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் பிற இடங்களிலும் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து மெட்ரோ கூடுதல் தலைமை செயலாளர் அல்கேஷ் குமார் ஷர்மா அவர்கள் கூறுகையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை சைக்கிள்கள் மக்களுக்கு கொடுப்பதாகவும், அதனை ஊக்குவிப்பதற்காக தான் மெட்ரோவுக்குள் சைக்கிள்களை அனுமதித்து உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு மக்கள் சைக்கிள்களை இனி பயன்படுத்துவார்கள் எனவும் இது சைக்கிள்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதற்கு ஊக்குவிப்பாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…