இனி WhatsApp மூலம் PF புகார்களை தெரிவிக்கலாம்..!
பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஒ) வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. சந்தாதாரர்களின் புகார்களை விரைவாக தீர்க்கும் நோக்கத்துடன் இந்த சேவை கொண்டு வரப்பட்டதாக தொழிலாளர் அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
EPFO ஏற்கனவே EPF IGMS போர்ட்டல், CPGRAMS, சமூக ஊடக தளங்களான (பேஸ்புக் மற்றும் ட்விட்டர்) மற்றும் 24 மணி நேர கால் சென்டர் ஆகியவை மூலம் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறது. EPFO இன் 138 பிராந்திய அலுவலகங்களிலும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியின் மூலம், பி.எஃப் பங்குதாரர்கள் தனிப்பட்ட EPFOவின் பிராந்திய அலுவலகங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
கொரோனாவின் போது உறுப்பினர்களுக்கு தடையற்ற சேவைகளை வழங்குவதே இதன் நோக்கம் என்று தொழிலாளர் அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. புகார்களை உடனடியாக தீர்ப்பதை உறுதி செய்வதற்கும், வாட்ஸ்அப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும், ஒவ்வொரு பிராந்திய அலுவலகத்திலும் ஒரு தனி நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 1,64,040 க்கும் மேற்பட்ட புகார்கள் மற்றும் கேள்விகளை வாட்ஸ்அப் மூலம் EPFO தீர்த்துள்ளது. அனைத்து பிராந்திய அலுவலகங்களின் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்கள் EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.