டெல்லி: கடந்த 3 தேர்தல்களில் 100ஐ கூட தாண்டாத காங்கிரஸ் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இனி வரும் தேர்தல்களிலும் பாஜக கூட்டணியே வெல்லும் என பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார்.
18வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். நேற்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து உரையாற்றினார். நீட் விவகாரம், அக்னிவீர் திட்டம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களை முன்வைத்து இருந்தார் .
இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி , குடியரசு தலைவர் உரைக்கு பதிலுரை அளித்து வருகிறார். ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் பிரதமர் மோடி. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். கடும் அமளிக்கு நடுவிலும் பிரதமர் மோடி தனது உரையை தொடர்ந்து நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், கடந்த 3 மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 100ஐ கூட தொட முடியாமல் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என மக்கள் தீர்மானித்து விட்டனர். எதிர்க்கட்சியினர் தாங்கள் வெற்றி பெற்றது போல நினைத்துக்கொள்கின்றனர்.
மத்தியில் மட்டுமல்ல மாநிலங்களிலும் நாங்கள் ஆட்சியை பிடித்துள்ளோம். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் ஆட்சியில் உள்ளோம். அருணாச்சல பிரதேசம் , ஆந்திரா , ஒடிசாவில் எங்கள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. கேரளாவில் கூட ஒரு சீட் வெற்றி பெற்று அம்மாநிலத்தில் எங்கள் வெற்றி கணக்கை தொடங்கி விட்டோம். இனிவரும் தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். மகாராஷ்டிரா , ஹரியானா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்களிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெரும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு இடையிலும் பிரதமர் மோடி தனது உரையை ஆற்றி வருகிறார்.
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…