வரும் ஜூலை 26-ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான NEET தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார்.
இந்தியாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்கள் அனைத்து மூடப்பட்டது. ஊரடங்கு தொடந்து நீடிக்கப்பட்டு கொண்டே செல்வதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற வேண்டிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சில நுழைவு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் தேர்வுகள் நடைபெறுமா..? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், மே மாதம் மருத்துவ படிப்புகளுக்கான NEET நுழைவுத்தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான NEET நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார். அதில், வரும் ஜூலை 26-ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான NEET தேர்வு நடைபெறும் என அறிவித்தார். மேலும் JEE முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும் என அறிவித்தார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…