தேர்தல் வழக்கில் நந்தம் விஸ்வநாதனுக்கு நோட்டீஸ்..!
தேர்தல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நத்தம் தொகுதியில் விஸ்வநாதன் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் வேட்புமனுவில் தகவல்கள் மறைத்தும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து நத்தம் விசுவநாதன் வெற்றி பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நத்தம் விஸ்வநாதன் வெற்றியை செல்லாது என அறிவிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நத்தம் விஸ்வநாதன், இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.