“இழிவுப்படுத்த அப்படிப் பேசவில்லை”…சமந்தாவுக்கு எதிரான கருத்து – வாபஸ் பெற்ற அமைச்சர்!

சமந்தாவின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் அவருடைய விவாகரத்து பற்றி பேசவில்லை என அமைச்சர் சுரேகா தெலுங்கானாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

minister Surekha

சென்னை : சமந்தா விவாகரத்து பற்றி தெலங்கானா அமைச்சர் சுரேகா பேசிய வீசியம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகு, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்து இருந்தார்கள்.

அதன்பிறகு, நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்துக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர் தனது இரண்டாம் மனைவியுடன் வாழ்ந்து வரும் நிலையில், சமந்தா தன்னுடைய கவனத்தை சினிமா மீது மட்டுமே வைத்துக்கொண்டு இருக்கிறார். இந்த சூழலில், இவர்களுக்கு வேதனையைக் கொடுக்கும் வகையிலும், இவர்களுடைய பெயரைக் கலங்கப் படுத்தும் வகையில், அமைச்சர் சுரேகா பேசியிருக்கிறார்.

தெலுங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சுரேகா சமந்தா விவாகரத்து பற்றிப் பரபரப்பான விஷயத்தைப் பேசியுள்ளார். அதாவது, கே.டி.ஆரின் அராஜகத்தால்தான் பல நடிகைகள் விரைவிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள் எனவும், அவரால்தான் சமந்தாவுக்கு விவாகரத்து நடந்தது” எனவும் பேசியிருந்தார்.

இவர் பேசியிருந்ததைப் பார்த்த சமந்தா ” எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்த ஒன்று. அதில் எந்த அரசியல் சதியும் இல்லை. தயவுசெய்து எனது பெயரை அரசியல் சண்டைகளில் இழுக்க வேண்டாம். நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டவள். இனியும் அப்படி இருக்க விரும்புகிறேன்” எனக் கூறியிருந்தார். ஆனால், சுரேகா பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்த காரணத்தால் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பலரும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக, நாக சைதன்யா, நாணி, நாகர்ஜுனா, ஜூனியர் என்டிஆர் ஆகியோர், அமைச்சர் சுரேகா பேச்சுக்கு எதிராகக் கண்டனங்களைத் தெரிவித்து மன்னிப்பு கேட்கவேண்டும் எனக் கூறியிருந்தார்கள். அதைபோல், முன்னாள் முதலமைச்சரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் அமைச்சர் சுரேகா 24 மணி நேரத்திற்குள் தனது அறிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதனையடுத்து, அமைச்சர் சுரேகாசமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சை கருத்தைத் திரும்பப் பெற்றுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ” நான் என்னுடைய அரசியல் பயணத்தில் இதுவரை யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பேசியது இல்லை. சமந்தா மற்றும் அவரது குடும்பத்தை இழிவுப்படுத்த அப்படிப் பேசவில்லை. ஆதாரம் இல்லாமல் நான் அப்படிப் பேசமாட்டேன். எனது பேச்சும், கருத்தும் உங்களைப் புண்படுத்தி இருந்தால், அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமந்தாவின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் அதனைச் செய்யவில்லை. இருப்பினும், நான் வேறொருவரைக் காயப்படுத்திவிட்டேன் என்று எனக்குத் தெரியும், அதனால் நான் எனது கருத்தை நிபந்தனையின்றி திரும்பப்பெற்றேன். நான் ஏற்படுத்திய வலியை மற்றவர்கள் அனுபவிக்கக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்தேன்” எனவும் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்